உயர்தரப் பரீட்சை அனுமதி அட்டை தொடர்பான அறிவித்தல்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் மாணவர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் அதனை பதிவிறக்கம் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தரவுத்தளத்திற்குள் பிரவேசித்து பாடசாலை பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பரீட்சார்த்திகள் தமது அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும்

அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியாத பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.No comments: