அரை சொகுசு பேருந்து சேவை நிறுத்தம்??

அரை சொகுசு பேருந்து சேவையை நிறுத்துவது குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.  அதன்படி, இந்த பஸ் சேவையை விரைவில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்தார்.

 முச்சக்கர வண்டிகள் மற்றும் பயணிகள் போக்குவரத்து படகு சேவைகளை ஒழுங்குபடுத்தும் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே மேலும் தெரிவித்துள்ளார்.No comments: