கடன் வாங்காது நாட்டை முன்னேற்றுவதே இலக்கு, அரச ஊழியர்களுக்கான நிவாரணம் விரைவில்.-ஜனாதிபதி-
அனுராதபுர காலத்தில் அரசர்கள் கடன் வாங்காமல் பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பியது போன்று அடுத்த 05-10 வருடங்களில் யாருக்கும் சரணடையாமல் பெருமையுடன் வாழக்கூடிய கடனற்ற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் வருமான நிலைமை ஸ்திரமாகி பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால், இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நிவாரணமாக அதிக கொடுப்பனவுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மஹா போதி மண்டபத்தில் இடம்பெற்ற மல்வத்து பிரிவின் மல்வத்து பீட நுவர கலாவிய பிரதம சங்கநாயகம் பல்லேகம ஹேமரதனவுக்கு ஸ்ரீ சங்க பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று சகலரும் எதிர்நோக்கும் சிரமங்களை நன்கு புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, 2024 ஆம் ஆண்டளவில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார முன்னேற்றத்துடன் அனைத்து மக்களுக்கும் சம்பள அதிகரிப்பு உட்பட நிவாரணங்களை வழங்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அபிநவ அதமஸ்தானாதிபதிக்கு ஸ்ரீ சன்னஸ் பட்டாவையும், பிரதமர் தினேஷ் குணவர்தன விஜினிபாதத்தையும் வழங்கி வைத்தார்.
இந்த அன்னதான நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அநுராதபுரம் மகா விகாரையை அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாத்தல் தொடர்பான விசேட சட்டமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
No comments: