தனஞ்சய டி சில்வா வின் தந்தை படுகொலை – மற்றுமொரு சந்தேகநபர் கைது.
கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் படுகொலையுடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபர் நேற்று புதன்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா, கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் இரத்மலானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய மலிந்து லக்மால் என அழைக்கப்படும் சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சயுருபுர அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து குறித்த சந்தேக நபரை குற்றச் செயல்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கல்கிஸ்ஸ குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: