தினேஷ் ஷாஃப்டர் விவகாரத்தில் திடீர் திருப்பம், இறுதி உயில் கிடைத்தது.

மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல தொழிலதிபர் திரு.தினேஷ் ஷாப்டர் தனது கடைசி உயிலை எழுதி வைத்திருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

 இந்த கடைசி உயில் அவர் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு எழுதப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அந்த கடைசி உயிலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அவருடைய சொத்தில் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 கடைசி உயிலின் விவரங்கள் தற்போது காவல்துறை வசம் உள்ளதால், மரணம் தொடர்பான விசாரணைகள் புதிய திசையில் சென்றுள்ளன.No comments: