உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு திறந்த நீதிமன்றில் கடுமையான முறையில் எச்சரிக்கப்பட்டார் மைத்ரி..

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கோட்டை நீதவான் திலின கமகே இன்று திறந்த நீதிமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 மைத்திரிபால சிறிசேனவும் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வழக்கில் ஆஜராகவேண்டியிருந்த போது அவர் ஆஜராகவில்லை என்பதே அதற்குக் காரணம்.

 பின்னர் இரண்டாவது தடவையாக மைத்திரிபால சிறிசேனவின் பெயர் நீதிமன்றில் அழைக்கப்பட்டு அதேநேரம் அவர் உள்ளே பிரவேசித்தார்.

 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதிவாதியாக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

 இந்த வழக்கை மார்ச் 13ஆம் தேதி மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



No comments: