முடங்கும் நிலையில் இலங்கையின் வங்கிக் கட்டமைப்பு???.

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியொன்றின் ஐநூறுக்கும் மேற்பட்ட உயர் முகாமையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 நாட்டின் பொருளாதாரச் சிக்கல்களால் வறுமை அதிகரித்து, ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் வங்கி முறைமையை நகர்த்தி செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் 470 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவித்த அவர், வைத்தியசாலை அமைப்பை நடத்துவதிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
No comments: