தேர்தலுக்காக பணம் அச்சு..எகிறும் பணவீக்கம், பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு?...

 அரச வங்கிகள், துணை அரச நிறுவனங்கள் தமது பொருளாதார ஒத்துழைப்பை கைவிட்டுள்ள நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட வேண்டும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

 அதன் காரணமாக நாட்டில் பொருட்களின் விலை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரித்து பணவீக்கம் உச்சகட்டத்தை அடையும் என அமைச்சு கருத்து தெரிவித்துள்ளது.

 பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 6 மாதங்களில் நாணயத்தாள் திருத்தம் குறைக்கப்பட்டதன் காரணமாக பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

 தேர்தலுக்குத் தேவையான பணம் அச்சிடப்படவேண்டியுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் பெரும் ஆபத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.No comments: