தியவன்னா ஓயாவில் படகு கவிழ்ந்து விபத்து- ஒருவரை காணவில்லை.

தியவன்னா ஓயாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

 நேற்று (25) இரவு நான்கு பேர் படகில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் படகு கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 எனினும், அவர்களில் மூவர் உயிர் பிழைத்துள்ளனர்.

 காணாமல் போனவரை தேடும் பணியை கடற்படை சுழியோடிகள் பிரிவு ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.No comments: