முட்டை இறக்குமதிக்கு அனுமதி.

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் நுகர்வோர் விவகார அதிகார சபை கடந்த 20ஆம் திகதி முட்டை விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. அதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் காணப்பட்டது.

இருப்பினும் வர்த்தமானி அறிவித்தலையும் மீறி அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை அண்மையில் நாடாளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

அதன்படி தெஹிவளை, நாரஹேன்பிட்டி பகுதியில் சில வர்த்தகர்களுக்கு அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நிச்சயம் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

நாங்கள் ஒரு நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும். எனினும் எங்களுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. எதிர்வரும் நாட்களில் அனுமதி கிடைத்தால் முட்டையை இறக்குமதி செய்வோம் என்றார்.
No comments: