வெளிநாடு செல்பவர்களுக்கான சகல வழிகளுக்கும் வரிகளைக் கொண்டு அடைப்பு.

இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையம் அல்லது துறைமுகத்திலிருந்து புறப்படும் நபர்கள் செலுத்த வேண்டிய விலகல் வரி தொடர்பான புதிய அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த அரசாங்க அறிவிப்பின் படி, 2022. 03. 27 முதல் 2023' வரையான காலப்பகுதியில் கொழும்பு சர்வதேச விமான நிலையமான இரத்மலானையிலிருந்து இலங்கைக்குள் விமானத்தில் புறப்படும் ஒவ்வொருவருக்கும் 30 அமெரிக்க டொலர்கள் விலகல். 03. 26 வரி செலுத்த வேண்டும்'

 மேலும், 12. 01. 2023 முதல் 11. 07. 2023 வரையான காலப்பகுதியில் யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஒவ்வொருவரிடமிருந்தும் $30 விலகல் வரி அறவிடப்படும்.

 மத்தள, இரத்மலானை அல்லது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தைத் தவிர இலங்கையின் எந்தவொரு விமான நிலையத்திலிருந்தும் புறப்படும் எவரும் 60 டொலர் விலகல் வரி செலுத்த வேண்டும் என குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுபவர்களுக்கே இந்த விதி பொருந்தும்.

 மேலும் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக புறப்படுபவர்களுக்கும் $60 விலகல் வரி விதிக்கப்படும்.

 மத்தள மகிந்த ராஜபக்ச விமான நிலையத்துடன் தனது சேவையை ஆரம்பிக்கும் சர்வதேச விமான சேவை நிறுவனங்களுக்கு இந்த வரியை செலுத்துவதில் இருந்து இரண்டு வருட காலத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
No comments: