இராஜாங்க அமைச்சர் டயானா மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இவர் பிரித்தானிய பிரஜை என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ உரிமை இல்லை என்று மனுதாரர் வழக்குப்பதிவு செய்திள்ளார். எனவே, இவரதுஎம்.பி. பதவியை ரத்து செய்ய ஆணை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு இன்று அழைக்கப்பட்டதையடுத்து, டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி, சில ஆவணங்களைப் பெற்று, உரிய ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கான திகதியை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார். நீதிமன்றம் பெப்ரவரி 17ம் திகதி வரை அவருக்கு அவகாசம் வழங்கியுள்ளது.
No comments: