கொழும்பு யுவதி கொலைச்சம்பவம் - இளைஞர் கைது

கொழும்பு குதிரை பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவன் இன்று (17) மாலை வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கருவாத்தோட்டம் பொலிஸாரிடம் அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் பல்கலைக்கழக மாணவன் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.




No comments: