நுவரெலியா விபத்து - உயிரிழந்தவர்கள் விபரம்

நுவரெலியா - நானுஓயா ரதல்ல பகுதியில் நேற்று 20  இடம்பெற்ற  விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர்  உயிரிழந்ததோடு 50 இற்கும் மேற்பட்டவர்கள்  படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ் வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதுண்டதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் வேனில் பயணித்த அறு நபர்களும்  மோதுண்டுட ஆட்டோ சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்

வேனில் பயணித்த தாய், தந்தை, இரு பிள்ளைகள் உறவினர் ஒருவர் மற்றும் சாரதி ஆகியோர் ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஆட்டோ சாரதி நானுஓயா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்

01:- அப்துல் ரஹீம் வயது(55)

02:- ஆயிஷா பாத்திமா வயது(45)

03:- மரியம் வயது(13)

04:- நபீஹா வயது (08)

05:- ரஹீம்வயது (14)

06:- நேசராஜ் வயது (25) (சாரதி)

 ஆட்டோ சாரதி

07:- சண்முகராஜ் வயது (25)






No comments: