மூவரைப் பலியெடுத்த தீ விபத்து.

 வீடு  தீப்பிடித்ததில் தாய், மகன், மகள் பலி.. தந்தை படுகாயம். 

 அநுராதபுரம், அலியாபத்து பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

 30 வயதுடைய தாய், பத்து வயது மகள் மற்றும் ஐந்து வயது மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 குழந்தைகளின் தந்தை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.No comments: