இன்றும் சிலர் அமைச்சர்களாக பதவியேற்பு.

மேலும் பல அமைச்சுப் பதவிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இதன்படி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.பி.திஸாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

 ரமேஷ் பத்திரன, பந்துல குணவர்தன உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சர்களின் அமைச்சுகள் பகுதிவாரியாக புதிய அமைச்சர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



No comments: