எண்ணெய் கொள்வனவுக்காக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு டொலர் வழங்குவதை இடைநிறுத்தியது மத்திய வங்கி.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான டொலர்களை ஜனவரி முதலாம் திகதி முதல் வழங்குவதை மத்திய வங்கி நிறுத்தியுள்ளது.
வங்கிகளிடம் தற்போது போதுமான அந்நிய செலாவணி பற்றாக்குறையாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய தேவைக்காக வங்கி முறையின் ஊடாக டொலர்களை பெற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் மாத்திரம் மத்திய வங்கி இதில் தலையிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments: