அட்டை தட்டுப்பாடு, தேசிய அடையாள அட்டை அச்சிடுதல் இடைநிறுத்தம். .

 தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த பிள்ளைகளுக்குப் பொதுப் பரீட்சைக்குத் தேவையான தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் சான்றளிக்கப்பட்ட கடிதம் மாத்திரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 இந்த ஆவணம் ஒக்டோபர் மாதம் வரை செல்லுபடியாகும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகின்றார்.

அட்டை தட்டுப்பாடு தீர்க்கப்படும் வரை அடையாள அட்டை வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.
 

No comments: