பேருந்துகளுக்கு இடையிலான போட்டியால் மோட்டார் சைக்கிள் சாரதி கவலைக்கிடம்.

அதிவேகமாகச் சென்ற இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றையொன்று முந்திச் செல்லும் போது ஏற்பட்ட போட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மோதியதில் இன்று (19) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.

 பனாகொட ஹைலெவல் வீதியின் லக்ஷபான வளைவுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments: