பல கோடிகள் பெறுமதியான தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் யாழ் கடற்கரையில் மீட்பு.

 யாழ்ப்பாணம் அனலைத்தீவு கடற்கரையில் 2 கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான 60 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 அனலைத்தீவு கடற்பரப்பில் வடக்கு கடற்படை கட்டளை அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கடலோரத்தில் இரண்டு சாக்கு மூட்டைகள் குவிக்கப்பட்டிருந்ததையும், அந்த சாக்கு மூட்டைகளை பரிசோதித்த போது, ​​25 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இந்தியாவில் இருந்து கடத்தல்காரர்கள் குறித்த கேரள கஞ்சாவை கடல் மார்க்கமாக கொண்டு வரும்போது கடற்படையின் படகுகளை பார்த்து கடலில் வீசியிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

 கடலில் மிதந்த கேரள கஞ்சாவை மேலதிக விசாரணைகளுக்காக கைட்ஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.No comments: