பயங்கர வீதிவிபத்து.. ஒருவர் பலி.

வவுனியா செட்டிகுளம் தட்டான்குளம் பகுதியில் நேற்று (25) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று கென்டர் ஒன்டுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

 செட்டிக்குளத்துக்கும் தட்டாங்குளத்துக்கும் இடையில் பிரதான வீதியில் தட்டாங்குளம் பகுதியிலிருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற கன்டர் மற்றும் செட்டிக்குளத்திலிருந்து பூசங்குளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 எவ்வாறாயினும், விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 வவுனியா ரங்கேத்கம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நந்தன கிரிஷாந்த என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, சாரதியால் அதிகவேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் செட்டிகுளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.No comments: