ஹம்பாந்தோட்டையில் 85 குழுக்கள் போட்டி, பரம்பரை எதிரிகள் கூட்டணி.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி எச்.பி.சுமணசேகர தெரிவித்துள்ளார்.

லுணுகம்வெஹர பிரதேச சபைக்கு ஜனசேத பெரமுன வழங்கிய வேட்பு மனுவும் கட்டுவன பிரதேச சபைக்கு சுயேச்சை குழுவினால் முன்வைக்கப்பட்ட வேட்பு மனுவும் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 71 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 14 சுயேச்சைக் குழுக்களுடன் இணைந்து 85 குழுக்கள் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளன. இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலை மாநகர சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.No comments: