Breaking News - நுவரெலியா பஸ் விபத்து 7 பலி
நுவரெலியா - நானுஓயா பகுதியில் பேரூந்து ஒன்றும் சிற்றூர்ந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் இடம்பெற்ற விபத்தில் 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 7 பேர் இறந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் குறிப்பிடுகின்றன
கொழும்பு தேஸ்டன் பாடசாலையின் மாணவர்கள் சுற்றுலா சென்ற பேரூந்து நுவரெலியாவில் இருந்து நானுஓயாவுக்கான ரதெல்ல குறுக்கு வழியில் கொழும்பை நோக்கி பயணித்துள்ளது.
இந்த பேரூந்து நானுஓயா குறுக்கு வீதியில் உள்ள வளைவு ஒன்றில் பயணித்த போது நிறுத்தல் தடையாளி உரிய வகையில் இயங்காமையால் டிக்கோயா பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற சிற்றூர்தி ஒன்றுடன் மோதியதுடன் அதற்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டி ஒன்றுடனும் மோதி பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது.
இதன்காரணமாக, சிற்றூர்தியிலும், பேரூந்திலும் பயணித்த 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: