181 புள்ளிகளுடன் மாவட்டரீதியில் முன்னிலை பெற்ற மாணவன்

 தரம் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகளின்படி திருக்கோவில் கல்வி வலயத்தில் 144 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்

ஆலையடிவேம்பு கோட்டத்தில் 78 மாணவர்களும் திருக்கோவில் கோட்டத்தில் 57 மாணவர்களும் பொத்துவில் கோட்டத்தில் 11 மாணவர்களும் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆலையடிவேம்பு கோட்டத்தில் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் 16 மாணவர்களும் மற்றும் அன்னை சாரதா வித்தியாலயத்தில் 16 மாணவர்களும் விவேகானந்தா வித்தியாலயத்தில் 15 மாணவர்கள்  வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

இதே வேளை அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலய மாணவன் ராஜவரதன் கதுராஜ்  181 புள்ளிகளை பெற்று வலய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதுடன் அம்பாரை மாவட்டத்தில் தமிழ் மொழிமூல மாவர்களில் முதன் நிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments: