பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபால் விசேட ஒத்திவைப்பு பிரேரனை இன்று!


பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் இன்றைய தினம் விசேட ஒத்திவைப்பு பிரேரனை ஒன்றை முன்வைக்கவுள்ளார்.  

2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி அம்பாறை மாவட்டத்தில் பல ஏக்கர் காணிகள் காட்டு வாழ்க்கைக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்ட அதேவேளை,  2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி பல ஏக்கர் காணிகள் காட்டுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

அதேவேளை! இன்று இடம்பெறும் விசேட ஒத்திவைப்பு பிரேரனை மூலம் அம்பாறை மக்களுக்கு சொந்தமான

இந்த காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், மீண்டும் வர்த்தமானி அறிவித்தல்  மீள்திருத்தம் செய்யப்பட வேண்டும் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்பட உள்ளன. இதனால் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் 38 காணிப்பிரச்சினை அத்துடன் பதினையாயிரம் ஏக்கர் காணிப்பிரச்சினைக்கு எதிர்காலத்தில் தீர்வுகளும் எட்டப்பட உள்ளன.

Post a Comment

0 Comments