O\Level தேர்வாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு


க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 16ஆம் திகதிக்குள் விநியோகப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். 

 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் நேர அட்டவணை பரீட்சார்த்திகளின் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments