அட்டன் டிக்கோயாவில் பதாதைகளை ஏந்தி கோஷமிட்டு எதிர்ப்பு

(க.கிஷாந்தன்) 

சர்வதேச அன்னையர் தினம் இன்றாகும். இந்த சர்வதேச அன்னையர் தினத்தினையொட்டி நாட்டில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. மலையகப்பகுதிகளிலும் சர்வதேச அன்னையர் தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று (08) நடைபெற்றன.

 அன்னையர்களை கௌரவிக்கும் முகமாக பிரிடோ நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச அன்னையர் தினம் வெளிநாட்டு செலவாணியினை பெற்றுக்கொடுக்கும் அன்னையர்களுக்கு உரிமையை வழங்கு எனும் தொனிப்பொருளில் டிக்கோயா நகர மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

 இதில் அன்னையர்கள் மகிழ்வுரும் வகையில் அவர்களின் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் 'அந்நியச் செலவாணியினை பெற்றுத்தரும் அன்னையரின் பாதுகாப்பை உறுதி செய்' 'தாய்மார்களின் உரிமைகளை அரசு உறுதி செய்ய வேண்டும்.' 

:குடும்ப வலுத்திட்டத்தை நடைமுறை படுத்து போன்ற வாசகம் எழுதிய சுலோக அட்டைகளை கையில் ஏந்தியவாறு கோசமிட்டனர். இந்நிகழ்வில் பிரிடோ நிறுவனத்தின் உதவி நிறைவேற்று பணிப்பாளர் சந்திரசேகரம், இணைப்பாளர் கே.புஸ்பராஜ், அமரசெல்வம், பெண்கள், யுவதிகள், தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.No comments: