ad விளம்பர தொடர்புகளுக்கு 0779516119

கல்முனையில் இனவாதம் பேசி பிரித்தாள்கிறார்கள் - சந்திரகாந்தன்
தற்போது நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.டொலர் இன்மையால் பொருள் தட்டுப்பாட்டுடன் விலையேற்றமும் இரு மடங்காகியுள்ளது என முன்னார் பாராளுமன்ற உறுப்பனர் சந்திர நேரு சந்திரகாந்தன் குறிப்பிடார்.

மேலும் கருத்து தெரிவித்த சந்திரகாந்தன்

இந்நிலையில் அரசுக்கெதிராக நாடு முழுதும் போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைளும் வலுப்பெற்று வருகின்றது.இந்நிலையில் பல்லின சமூகங்களும் இனமத பேதமின்றி கொழும்பு காலிமுகத்திடலில் ஒன்றுகூடி அரசுக்கெதிராக அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகினறனர்.

தமக்குள்ள மனக்கசப்புக்களையும் இனமுரன்பாடுகளையும் மறந்து எல்லா சமூகத்தவரும் ஒன்றுபட்டு நின்கின்ற இவ்வேளையில் ஒரே மொழி பேசும் இரு சமூகங்கள் வாழ்கின்ற கல்முனையில் இரு இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும் நோக்கில் சுய அரசியல் இலாபங்களுக்காக தமிழர்களை நிர்வாக ரீதியாக அடக்கி ஒடுக்கும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அரங்கேறி வருகின்றது.

அதனடிப்டையில் கல்முனை காணி பதிவகத்திலிருந்து கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகம் நீக்கப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியதாகும். "காலியிலே சத்துவம் பேசுபவர்கள் கல்முனையில் இனவாதம் பேசி பிரித்தாளுகிற" செயற்பாடானது நிறுத்தப்பட வேண்டும்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்துக்குரிய காணிப்பதிவுகள் அனைத்தும் கல்முனை தெற்கு பிரதேச செயலகபிரிவின் கீழ் அண்மையில் மாற்றப்பட்டுள்ளமையானது வடக்கு தமிழ் நிர்வாக பிரிவின் கீழ் வாழும் மக்களின் உரிமைகளில் கை வைக்கப்பட்டு நியாயமற்ற முறையில் பறிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார் 


கல்முனை காணி பதிவகத்தில் காணி மற்றும் ஆவணப்பதிவு நடவடிக்கைகள் பிரதேச செயலக ரீதியில் 13 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் 2012 ல் இருந்து கடந்த 10 வருடங்களாக இயங்கி வருகின்றது.


கல்முனை வடக்கு பிரதேச பிரிவின் கீழ் உள்ள 29 கிராம சேவகர் பிரிவின் கீழ் உள்ள காணிகள் இதுவரை காலமும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந் நடடிக்கையானது தற்போது நிறுத்தப்பட்டு தெற்கு பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளமையானது கல்முனை வாழ் தமிழ்மக்களுக்கு செய்யப்பட்ட பாரதூரமான அநீதியாகும்.


இன நல்லுறவு என்கின்ற பெயரில் மறைமுகமாக கல்முனை மக்களின் உரிமைகளை கருவருக்கும் செயலை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.அவ்வாறான துரோக செயல்களுக்கு
எமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் துணையாக இருப்பது வேதனை தருகின்றது.
அம்றை மாவட்டத்தில் பாணமை முதல் பெரிய நீலாவணை வரை தமிழர்களின் இருப்புக்களும் பூர்வீக நிலங்களும் காலத்துக்காலம் சுரண்டப்பட்டு அல்லது பறிக்கப்பட்டே வருகின்றது.இதற்கு முஸ்லீம் அரசியல்வாதிகள் அப்பாவி முஸ்லீம் மக்களை பகடைகாய்களாக பயன்படுத்தி முஸ்லீம்கள் மட்டுமே ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற வேண்டும் என்கின்ற குறுகிய அரசியலை நோக்காக கொண்டு வெளித் தோற்றத்தில் இன ஐக்கியத்தையும் உள் தேற்றத்தில் பகையையும் வளர்த்து வருகின்றனர்.


இவ் அரசியல்வாதிகள் அரசாங்கத்திறகு ஒரு முகமும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இன்னொரு முகத்தையும் காட்டி நல்லுறவை வளர்க்கின்றனர்.கல்முனையில் தமிழர்கள் மீது முஸ்லீம் அரசியல்வாதிகள் காழ்புணர்ச்சிகள் காலத்துக்காலம் தெட்டத்தெளிவாக புலப்படுகையில் இனக்க அரசியல் பேசும் தமிழர் தரப்பு நாடாளுமன்றில் முஸ்லீங்களுக்காக குரல் கொடுக்கின்ற போது தமிழர் தரப்புக்கு ஏற்படும் அநீதிகளை கண்டும் காணாது கடந்து செல்வது ஏன்?


"பிட்டும் தேங்காய் பூவும் போல" ஒரே மொழி பேசி தமிழர்களின் நிர்வாக அதிகாரங்களை அடக்கி ஒடுக்கி நசுக்குகின்ற போது இன ஐக்கியம் விட்டுக்கொடுப்புகள் என பேசி தமது குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக இன்னும் மௌனமாக வேடிக்கை பார்ப்பதென்பது தமிழர் அரசியல் பரப்பில் மாற்றப்பட வேண்டும்.

No comments: