சுடும் உத்தரவு- மீளப் பெறுவதாக உறுதியளித்துள்ளார் பிரதமர்



அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்த  துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவை ரத்து செய்வதாக புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார்.  

இந்த நடைமுறை குறித்து வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் விக்கிரமசிங்கவிடம் வினவியபோதே திரு.விக்கிரமசிங்க இந்த உறுதிமொழியை வழங்கினார். 

 கலவரம் மீண்டும் தொடங்கினால் மட்டுமே பாதுகாப்புப் படையினருக்கு இதுபோன்ற உத்தரவுகள் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கம் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், தமது கட்சியைச் சேர்ந்த எவரும் அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் தேடமாட்டார்கள் எனத் தெரிவித்தார். ஆட்சியில் செயல்படாமல் ஆதரிப்போம்,'' என்றார். "புதிய அமைச்சரவையில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

Post a Comment

0 Comments