மின் தடை தொடர்பான அறிவிப்பு

மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய வார இறுதி நாட்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு மூன்று மணித்தியாலமும் 20 நிமிடமும்  மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 A முதல் W வரையான 20 வலயங்களில் முற்பகல் 9 மணி முதல் மாலை5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேற் குறித்த குறித்த வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்விநியோகத்தடையினை அமுல் படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


Post a Comment

0 Comments