அலரிமாளிகையில் ஏற்பட்ட பதற்றத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

நேற்றிரவு (மே 10) அலரி மாளிகையில் ஏற்பட்ட பதற்றத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதிகாரி உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 இதற்கிடையில், காலி முகத்திடலில் ஈடுபட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

 மேலும், கோட்டகோகம போராட்டத் தளம் மற்றும் அலரிமாளிகை ஆகிய இரு இடங்களிலும் ஏற்பட்ட பதற்றத்தால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Post a Comment

0 Comments