இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ?பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்மாலிசேயாவை வழிபடுவதற்காக சென்ற பிரதமர், தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை அலரிமாளிகைக்கு விஜயம் செய்யவுள்ள கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் இதனை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments