திருக்கோவில் பகுதியில் கால்நடைகளின் நடமாட்டம் காரணமாக அதிகரித்து வரும் விபத்து


அம்பாறை திருக்கோவில் பகுதியில் பல மாதங்களாக கவனிப்பாரற்று பிரதான வீதியில் உலாவும் கால்நடை மற்றும் பிற விலங்குளால் வீதி விபத்து அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இன்றைய தினம் (04) திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியால் உந்துருளியில் பயணித்த இஸ்லாமிய குடும்பம் ஒன்று எதிர்பாராத விதமாக குறுக்கிட்ட கால் நடையில் மோதுண்டு விபத்திற்குள்ளாகிய சம்பவம் திருக்கோவில் விநாயகபுரம் பகுதியில் இன்று பதிவானது.

விபத்தில் சிக்கி சிறுகாயங்களுடன் காணப்பட்டவர்கள் பின்னர் வீடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது

திருக்கோவில் பகுதியில் கடந்த காலங்களில் கால்நடடை புழக்கம் அதிகரித்து காணப்படுவதுடன் விபத்துக்களை உருவாக்கும் காரணிகளாகவும் இவை காணப்படுகின்றது திருக்கோவில் பிரதான வீதியானது பிரதான வீதியாக காணப்படுகின்றதால் உரிய அதகாரிகள் கவனமெடுப்பது சிறந்தது



Post a Comment

0 Comments