அவசர காலச் சட்டம் என்றால் என்ன?


நாட்டில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகும் .

இந் நிலையில்  நாளை வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

அவசர காலச் சட்டம் என்றால் என்ன ?

பொலிஸாருக்கு மாத்திரம் இருக்கின்ற - சந்தேக நபர்களை கைது செய்வதற்கான அதிகாரம் - தற்போது இலங்கையிலுள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கப்படுகிறது.

பொலிஸார் தவிர்ந்த - ஏனைய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்களை - அத்தரப்பினரால் 48 மணித்தியாலயங்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படுகிறது.

48 மணித்தியாலங்களின் பின்னர் - பொலிஸாருக்கு சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டு - தடுப்பு காவல் கட்டளையின் கீழ் - அவரை ஒரு மாத காலம் தடுத்து வைக்க முடியும்.

ஒரு மாத காலத்திற்கு மேல் குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டுமாயின் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் - மேலும் ஒரு மாத காலத்திற்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது.

கைது செய்யப்படும் குறித்த சந்தேக நபரிடம் - முழுமையான விசாரணை முடிவடையும் வரை - நீதிமன்றத்திற்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் கிடையாது.

கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படும் குறித்த சந்தேக நபர் - குற்றமிழைக்காதவர் என்பதனை பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே - பிணை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்படும் பட்சத்தில் - பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அதிகாரம் - பொலிஸ் மாஅதிபருக்கு இந்த சட்டத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments