உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் - கைது செய்யப்பட்ட 55 பேருக்கும் 17 வரை விளக்கமறியல்

(கனகராசா சரவணன்)


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்தது தொடர்பாக சந்தேகத்தில்; கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 55 பேரையும் எதிர்வரும் 17 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் இன்று புதன்கிழமை (04) உத்தரவிட்டார்

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர்; ஸஹ்றான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின பேரில்; காத்தான்குடியை சேர்ந்தவர்கள் ஸாரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 69 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிசார் வழக்கு தாக்குல் மேற்கொண்டனர் இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்னர்.

இதில் ஸாரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர்,ஆகியோரது வழக்குகள்; நீதவான் நீதிமன்றில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டதுடன் இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் மேலும் 5 பேர் பிணையில் விடுவிக்க்பட்டதையடுத்து 55 பேர் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, பதுளை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைகளில் இருந்து அனைவரையும் அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவர்களை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியவில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments