தேசியரீதியிலான பரீட்சைக்கு திகதிகள் அறிவிப்பு

அடுத்து இடம்பெறவுள்ள தேசிய ரீதியிலான பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

 பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் LMD தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே 23 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அத்துடன், ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 16 ஆம் திகதியும், 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளது.


Post a Comment

0 Comments