திருக்கோவில் மண்டானை பகுதியில் மணல் ஏற்ற மக்கள் எதிர்ப்பு



அம்பாறை மாவட்டம் திருக்கோவில் மண்டானை பிரதேசத்தில் மண் அகழ முயற்சித்த ஒப்பந்தகாரர்களுக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இன்று முறுகல் நிலை ஏற்பட்டது.

மண் அகழ கனரக வாகனம் செல்லும் வீதியானது மிகவும் சேதமடைந்து காணப்படுவதாகவும் இவ் வழியாக கனரக வாகனம் போக்குவரத்தில் இடுபட்டால் வீதி மேலும் சேதமடைந்து மக்கள், பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து மேற் கொள்ள சிரமமாக இருக்கும் என தெரிவித்து மண்டானை பிரதேச மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதன் பின்னர் குறித்த இடத்திற்கு விரைந்த திருக்கோவில் மோட்டார் பிரிவு பொலிஸார் இரு தரப்பினருக்கும் இடையில் சுமுகமான பேச்சுவார்த்தை மேற்கொண்டு நாளை விசேட கூட்டம் நடாத்தி பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவர முடிவு செய்தனர்.

மேலும் திருக்கோவில் பிரதேச செயலாளரை இரு தரப்பினரும்  சந்தித்து இது தொடர்பில் சுமுகமான தீர்வை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

குறித்த வீதியால் பாடசாலை மாணவர்களை ஏற்றும் பேருந்து மிகவும் சிரமத்திற்கு மத்தியில் போக்குவரத்து மேற் கொள்வதுடன் வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் உரிய நேரத்திற்கு மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.



No comments: