மட்டக்களப்பில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது

  (கனகராசா சரவணன்) 
மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை செங்கலடி, ஜயங்கேணி பிரதேசங்களில் கொள்ளை வீடுடைப்பு மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஜயங்கேணி ஜெயச்சந்திரன் ரீம் என்ற பெயரில் இயங்கிவந்த குழுவைச் சேர்ந்த 4 பேரை கைக்குண்டு, வாள், கோடரி மற்றும் ஹரோயின் போதைப் பொருளுடன் இன்று வியாழக்கிழமை (31) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார். 

குறித்த பகுதிகளில் இந்து குழுவால் பெரும் அச்சுறுத்தல் நிலவி வந்துள்ளதையடுத்து சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் வழிகாட்டலில் மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையில் பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு தொடர்ந்து இரவு வேளைகளில் குறித்த பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த குழுவினர் பதுங்கியிருந்த இடத்தை சம்பவதினமான இன்று காலை பொலிசார் முற்றுகையிட்டு 4 பேரைகைது செய்ததுடன் கை;குண்டு ஒன்றும் வாள் ஒன்றும் கோடரி ஒன்று 8 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருள் என்பவற்றை மீட்டுள்ளனர். 

இதில் கைது செய்யப்பட்டவர்கள் வவுணியா மற்றும் ஏறாவூர் ஜயங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இதில் ஜயங்கேணியைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றும் 26 வயதுடைய இருவருக்கு கொள்ளை மற்றும் வீடுடைப்பு வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக 19 வழக்குகள் இருப்பதாகவும்

அவ்வாறே முன்னர் புளொட் அமைப்பில் செயற்பட்டடுவந்த வவுணியாவைச் சேர்ந்த இவர் பல்வேறு கொள்ளை மற்றும் வீடுடைப்பு வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்புடையவர் எனவும் அவரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த பகுதியில் இவ்வாறு கொள்ளை மற்றும் வீடுடைப்பு வாள்வெட்டு சம்பவங்களில் இன்னும் ஒரு குழு இயங்கிவருவதாகவும் இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பபட்டுவருவதாகவும் தெரிவித்த அவர் 

இவ்வாறு பொதுமக்களை அச்சுறுத்தி வருருவபர்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவருபவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவுக்கு தெரிவிக்குமாறு அவர் தெரிவித்தார் 


 


Post a Comment

0 Comments