டயகம பொலிஸ் நிலைய ஜும் வண்டி விபத்து

 (க.கிஷாந்தன்)


நுவரெலியா டயகம பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பொலிஸ் ஜீப் வாகனம் ஒன்று 18.03.2022 அன்று மாலை விபத்துக்குள்ளானதில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, பொலிஸ் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டயகம பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான பொலிஸ் ஜீப் வாகனம் ஒன்று வீதியிலிருந்து 15 அடி‌ உயரத்திலிருந்து கீழே பாய்ந்து குடைசாய்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

டயகம நகரத்திலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 இதன் போது குறித்த பொலிஸ் வாகனத்தில் சாரதியும் பொலிஸ் நிலைய அதிகாரியும் சென்றுள்ளனர். மேற்படி வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளது. இதுவரை விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

விபத்து தொடர்பான விசாரணைகளை டயகம போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Post a Comment

0 Comments