மட்டு-வாகரையில் மின்சார வேலியில் சிக்குண்ட நபர் பலி

 (கனகராசா சரவணன் மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கோமத்லாவெளி பிரதேசத்தில் பயிர் செய்கை செய்துவரும் தனது பண்ணைக்குள் ஊடுருவும் காட்டு மிருகங்களுக்கு அமைக்கப்பட்டிருந்த மின்சாரவேலியில் சிக்குண்டு பண்ணை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (23) காலையில் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்

கோமத்தலாவெளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரன் யோகேஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விவசபயி பண்ணைக்கு சட்டரீதியாக மின்சாரத்தை பெற்று விவசாய நடவடிக்கையை மேற்கொண்டுவந்துள்ளார் இந்த நிலையில் வத்தவப் பழப் பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயியின் பயிர்செய்கைகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்திவந்துள்ளது 

இதனையடுத்து பண்னையை சுற்றி மின்சார வேலியை அமைத்துள்ள இவர் சம்பவதினமான நேற்று காலை பண்ணைக்கு சென்றநிலையில் அவரால் அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டதையடுத்து உயிரிழந்துள்ளார். 

முறையற்ற முறையில் மின்சார கம்பிகள் இணைக்கப்பட்டதினால் இந்த மின்சாரத்தை பயன்படுத்தியதினால் இந்த மின்சாரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார் எனபொலிசாரின் ஆரம்பகட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது 

இதில் எயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கா ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: