திருக்கோவில் பிரதேசத்தில் அரச, தனியார் வாகனங்கள் நீண்ட வரிசை.


நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இன்று அதிகாலை வேளை முதல் அரச, தனியார் வாகனங்கள் மிக நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்ப தரிந்து நிற்பதனை எம்மால் காண முடிந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அக்கரைப்பற்று தெற்கு பல்நோக்கு கூட்டுறவு சங்க திருக்கோவில், தம்பிலுவில் நிலைய பொது முகாமையாளர் ஆர்.மகேஸ்வரன்.

கையிருப்பில் உள்ள டீசலை வாகன தாங்கியின் கொள்ளளவிற்கு ஏற்ப 10000/- பத்தாயிரம் ரூபாய்க்கு மாதாதிரம் நிரப்ப அனுமதித்துள்ளதாகவும் மேலதிகமான  கொள்கலன்களில் நிரப்ப அனுமதி கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கையிருப்பில் உள்ள டீசல் இன்றும் தினம் நிறைவடைவுள்ளதாக தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

கையிருப்பில் உள்ள பெற்றோல் இரண்டு தினங்களுக்கு போதுமானதாக உள்ளதாகவும். பெற்றோல் , டீசலை முப்படையினருக்கு அவசிய தேவை கருதி மேலதிக கலன்களில் வழங்க தாம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அம்பாறை மாவட்டத்தில் விவசாய செயற்கை கேள்விக் குறியாகியுள்ளதுடன் விவசாய செய்கை பாதிப்படையும் நிலை காணப்படுகிறது.








No comments: