மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் விசேட நடவடிக்கை ஆரம்பித்துவைப்பு
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான விசேட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மட்டக்களப்பு நகர் தேவநாயகம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது
இந்த விசேட தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கான கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை இன்று காலை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி .சுகுணன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தடுப்பூசி பெற்றுக்கொள்வதை அவசியமாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இதுவரை கொரோனா தொற்றுக்கான எதுவித தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு விசேட சந்தர்ப்பத்தினை வழங்கும் வகையில் இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை காலை 8-30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரையில் தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.

No comments: