மட்டக்களப்பில் வல்லல்பட்டை விற்பனைக்கு எடுத்துச் சென்ற ஒருவர் கைது

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகை அம்மன் ஆலைய வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் வல்லல்பட்டையுடன் தங்கியிருந்த அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை (18) மாலை கைது செய்துள்ளதுடன் ஆயிரத்து 700 கிராம் வல்லல் பட்டையை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிஎஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிஎஸ்.பி. பண்டார தலைமையில்லான பொலிசாருடன் இணைந்து சம்பவதினமான இன்று மாலை கண்ணகி அம்மன் ஆலைய வீதியிலுள்ள விடுதிஒன்றை முற்றுகையிட்டு குறித்த அறையை பொலிசார் சோதனை நடவடிக்கையின் போது ஆயிரத்து 700 கிராம் வல்லல்பட்டடையை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்த ஒருவரை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர் அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடையவர் எனவும் மட்டக்களப்பில் வல்லல்பட்டையை விற்பனை செய்வதற்காக அதன் மாதிரியுடன் வந்து விடுதியில் தங்கியிருந்துள்ளார் எனவும் பெரும் தொகையான
வல்லல்பட்டை அளுத்கமவில் பதுக்கி வைத்திருப்பதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
No comments: