இன்று (18) முதல் மீண்டும் மின் துண்டிப்பு அமுல்


நாடளாவிய ரீதியில் இன்று (18) முதல் மீண்டும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று (18) பிற்பகல் 2.30 மணி முதல் 6.30 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும், மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 45 நிமிடங்களும் மின் துண்டிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கட்டாய மின் துண்டிப்பு அவசியம் என்றும், அதற்கான வழிமுறை அறிவிக்கப்படும் என்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: