சற்று முன்னர் ஆலையடிவேம்பு பிரதான வீதியில் வீதி விபத்து

சற்று முன்னர் ஆலையடிவேம்பு பனங்காடு பாலத்திற்கு அருகாமையில் வீதி விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளதாக பிரதேச நலன்விரும்பி ஒருவர் எமக்கு தெரவித்தார்.

குறித்த விபத்தில் அக்கரைப்பற்று கன்னகிபுரம் பிரதேசத்தினை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் 1990 காவு வண்டி மூலம் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்

அக்கரைப்பற்றில் குறித்த 55 வயது மதிக்கத்தக்க முதியவர் கன்னகிபுரம் நேர்க்கிச் செல்லும் போது எதிர்புறம் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

மேலும்  விபத்தினை ஏற்படுத்திய நபர் குறித்த இடத்தில் இருந்து வரைந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .Post a Comment

0 Comments