காணாமல் போன கோமாரி இளைஞன் ஆலையடிவேம்பில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்தொடர்புடைய செய்தி 

அம்பாறை கோமாரி  களுகொல்லை பகுதியைச் சேர்ந்த தர்மதாச தர்மசீலன் என்ற  குறித்த இளைஞன் கடந்த 2022.01.01ம் திகதி மருத்துவ தேவைகளுக்காக உறவினர்களால் கல்முனை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட் நிலையில் 02ம் திகதி மாலை 09 மணியளவில் காணமால் போயுள்ளார்.

இளைஞர்  தொடர்பில் கடந்த (02) கல்முனை பொலிஸ் நிலையத்தில் வைத்தியசாலை நிர்வாகத்தினால்  முறைப்பாடு பதிவு  செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

இந் நிலையில் குறித்த இளைஞன் ஆலையடிவேம்பு இத்தியடி பகுதியில்  உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

No comments: