திருக்கோவில் தம்பட்டை பகுதியில் விபத்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

ஜே.கே யதுர்ஷன்


திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் பிரதான வீதி தம்பட்டை பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் மோட்டார்சைக்கிள் ஒன்று பஸ் உடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் 

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர்  படுகாயம் அடைந்துள்ளதுடன்  பொதுமக்களினால் அக்கரைபற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸ்சார்மேற் கொண்டுவருகின்றனர்.








No comments: