திருக்கோவில் பிரதேசத்தில் ஆவணங்கள் இன்றி குடியிருக்கும் மக்களுக்கான ஆவணம் வழங்கும் மக்கள் சந்திப்பு

ஜே.கே.யதுர்ஷன்

திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள காணிகளின் நீண்டகாலமாக ஆவணங்கள் இன்றி குடியிருக்கும் ,பயிர் செய்கையில் ஈடுபடுபடுவபர்களுக்கான ஆவணம் வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட விசாரணை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்று வருகின்றது.

 2008/04 சுற்று நிருபத்திற்கு அமைவானதாக குறித்த விசாரணைகள்  இடம்பெற்று வருகின்றது

 சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியம் இதற்கு அனுசரணை வழங்குகின்றது.

திருக்கோவில் பிரதேச  செயலாளர் திரு.த.கஜேந்திரன் உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன்,மற்றும் பிரதேச செயலக காணி உத்தியோத்தர்களான பூ.கோவிந்தசாமி ,ந.நந்தகுமார்,திருமதி.லோஜினி,மற்றும் காணிப்பிரிவு உத்தியோத்தர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

 2022/01/06 தொடர்க்கம் 2022/01/09 திகதி வரை  திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில்  விசாரணை தொடர்பான மக்கள் சம்திப்பு இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments: