அன்புடன் உளவளத்துணை நூல் பற்றிய பார்வை.

Book


Book

 இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் ஏறாவூர் மண் தந்த சிறந்த கல்விமான்தான் ஏ.றியாஸ் (B.A(HONS) PGDDC.MED.PGDEM
 மட்டக்களப்பு கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஆசிரியர் தொழில்வாண்மைத்துவ நிலையத்தின் முதன்மை அதிகாரியா கடமை புரிகின்றார்.

இவரின் எண்ணத்தில் 21-11-2021 உதித்த நூல்தான் அன்புடன் உளவளத்துணை என்ற அருமையான நூல் இந்த நூலானது உளரீதியில் மன அழுத்தத்திற்கு மாணவர்கள் மட்டுமின்றி எமது சமுகத்தில் வாழும் மனிதர்களும் கூட தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களைச் சமுகத்தின் பால் ஆற்றுப்படுத்திக் கொண்டு வருவதற்கு மிகவும் உறுதுணையாக உள்ளது அன்புடன் உளவளத்துணை என்ற நூல் என்பதில் சந்தேகம் இல்லை.

Book


ஒரு மாணவன் மற்றவர்களுடன் எப்படிப் பழக வேண்டும் சமுகத்தில் உள்ள மனிதர்கள் பிறமனிதர்களுடன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற நற் பண்புகளையும் விழுமையங்களையும ; சொல்லத்தவறவில்லை

உளவளத்துணையில் ஆரம்பித்து. தற்போதைய கொரோணா தந்த பாடங்களையும் அவற்றிலிருந்து விடுதலை பெறுவது பற்றியும் சொல்லிச் சென்றுள்ளார் நூலில் 26 (இருபத்தாறு உபதலைப்புகளில் விரிவாக உளவியல் சார்ந்த பல விடயங்களை பல நூல்களின் உதவியுடன் சொல்லியுள்ளார்.இன் நூலானது 265 பக்கங்களைக் கொண்டுள்ளது.இதன் விலை 600 ரூபாய்

இன் நூலுக்கு முன்னுரையை கி.புண்ணியமூர்த்தி ((யுயுடு)) பீடாதிபதி அட்டாளைச்சேனைஇ தேசிய கல்வி கல்லூரி அவர்கள் வழங்க அணிந்துரையைப் பேராசிரியர் கலாநிதி..பா.தனபாலன் அவர்கள் வழங்கியுள்ளார்.

இன் நூலானது கல்விகற்கும் மாணவர்கள் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கும்இகற்றல் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் விதத்தில் அமைந்துள்ளது இதன் விடய உள்ளடங்களையும் உள்ளம் கை நெல்லிக்கனி போல் புத்தகத்தின் பின்பக்கம் ஆ.ஊ. யுனைட் ஐயா அவர்கள்; மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை முதல்வர் சொல்லியுள்ளார்.

அத்தோடு உளவியல் தத்துவாசிரியர்கள் அரிஸ்டோட்டில்.பிளேட்டோரூசோ போன்றோர்கள் சொல்லிய கருத்துக்கல் போல உளரீதியில்

பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டோரை ஆற்றுகைப்படுத்தும் இன் நூல் என்பதில் சந்தேகம் இல்லை. பல வழிகளில் எமது மனித இனம் சிதைவடைந்து உடலளவும் உள்ளத்தாலும் சீரழிந்த வாழ்க்கை வாழ்கின்றார்கள் இப்படியான மனிதர்கள் மீண்டும் புத்துயிர் பெற்று புது வாழ்வு அமைக்க அன்புடன் உளவளத்துணை நூல் உதவும் என்பதில் சந்தேகமில்லை

நூல் விமசகர்

கவிஞர்.த. ரூபன் (ஆசிரியர்)

ஈச்சிலம்பற்று.திருகோணமலை

இலங்கை

Post a Comment

0 Comments