மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு(கனகராசா சரவணன்)

ட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (18) தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 350 மாணவர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வெட்டுக்காடு பொது சுகாதார பரிசோதகர் த.மிதுனன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய நாடளாவிய ரீதியில் 12 தொடக்கம் 15 வயதுவரையிலான பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இதனைத் தொடர்ந்து ஏனைய பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ச்சியாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறும் எனவும் மாணவர்கள் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் ஆர்வமாக ஈடுபட்டுவருவதாக அவர் தெரிவித்தார்

No comments: